Connect with us
Cinemapettai

Cinemapettai

தலைவரே கொல மாஸ்.. புகைப்படத்துடன் தனது அடுத்த பட தலைப்பை அறிவித்த தனுஷ்

dhanush-karnan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவரே கொல மாஸ்.. புகைப்படத்துடன் தனது அடுத்த பட தலைப்பை அறிவித்த தனுஷ்

நடிகர் தனுஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிஸியான நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமானவராக மாறிவிட்டார்.

இவரது படங்களை பேன் இந்தியா படமாக ரிலீஸ் செய்தால் நன்றாக கல்லா கட்டலாம் என தொடர்ந்து பெரிய தயாரிப்பாளர்கள் தனுஷை சுற்றி வட்டம் இடுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான அசுரன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் உச்சத்தை அடைந்தது.

அப்போதே உடனடியாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷை வைத்து இன்னொரு படம் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை ஆகிய சுற்றுவட்டாரங்களில் நடந்து வருகிறது.

இந்த படத்திற்கு ஏகப்பட்ட டைட்டில்கள் இணையதளங்களை சுற்றி வந்தன. அந்த வகையில் கர்ணன் என்பது படத்தின் தலைப்பாக இருக்கலாம் என அனைவரும் யூகித்து வைத்திருந்தனர். இந்நிலையில் தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தின் தலைப்பு கர்ணன் என படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.

இதனை வேற லெவலில் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top