karunas

கருணாசின் கார் உடைக்கப்பட்டது. அதுவும் இல்லாமல் அவரை அடிக்கவும் கிளம்பியது ஒரு கும்பல், ஒரு நடிகரின் பேச்சை கேட்டு கொண்டுதான் இவ்வாறு நடந்து கொள்கிறார்களாம். ஒரு காலத்தில் ஒன்றாகவே இருந்த இரு நண்பர்களுக்குள் என்ன பிரச்சனை?

கருணாசுக்கு எம்.எல்.ஏ சீட் வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான் என்றார்களே… ஆனால் விசாரித்தால் அது பொய். உண்மையில் கருணாசுக்கு அதிமுகவில் சீட் கொடுக்கப்பட்டதற்கு காரணம் அந்த நடிகர் அல்ல. மேலும் கருணாஸ் வெற்றி பெறக்கூடாது என அவருக்கு எதிராக வேலை பார்த்தாராம். அதுலயும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு.

தேர்தலுக்கு கருணாசிடம் வெறும் எண்பது லட்சம்தான் இருந்ததாம். மூணு கோடியாவது இருந்தால்தான் முடியும் என்று இவர் நினைக்க… நாளைக்கு காலையில் 2 கோடி தரேன் என்றாராம் அந்த நடிகர். அதற்கப்புறம் நடந்ததுதான் பெரும் அதிர்ச்சி. அந்த 80 லட்சத்தை முதலில் கொடுங்க என்று வாங்கியவர், உடனடியாக தொகுதியிலிருக்கும் வட்டச் செயலாளர் வார்டு மெம்பரையெல்லாம் வரவழைத்து அந்த பணத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு, வேலையை ஸ்டார்ட் பண்ண சொல்லிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

மறுநாள் 2 கோடி வரும் என்று காத்திருந்த கருணாசுக்கு ஏமாற்றம். 5 பைசா வரவில்லை. போன் அடித்தாலும் சுவிட்ச் ஆஃப். இந்த நிலைமைதான் அடுத்தடுத்த இரண்டு நாளும். கையிலிருந்த 80 லட்சமும் போச்சி. அப்போதுதான் புரிந்தது கருணாசுக்கு. திட்டம் போட்டு நாம் குழியில் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்தவர், நேராக சென்னைக்கு வந்து தலைமையிடம் சொல்ல … எப்படியோ அவர் பிரச்சனை முடிந்தது. அன்றிலிருந்தே இருவருக்கும் நட்பு பகை ஆனதாக கூறுகிறார்கள்.

இப்பொழுது நடிகர் சங்க பொதுக்குழு நடைபெறும் இந்த நேரத்தில், கருணாசையும் தாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறாராம் அந்த நடிகர்.