பாகிஸ்தானில் பிரபல நாயகிகளில் ஒருவர் நாடியா கான். இவரது 14 வயது மகள் பிரபல ஹாலிவுட் நிறுவனத்தில் நடந்த நடிகைக்கான தேர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

அப்போது அங்கு நடுவராக இருந்த ஒரு நடிகர் தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார் நாடியா கான்.

மேலும் இதுபற்றி அவர் கூறுகையில், தேர்வுக்காக சென்ற தனது மகளை நடுவர் ஒருவர் கையை பிடித்து இழுத்து அணைத்து அசிங்கமாக நடந்து கொண்டிருக்கிறார். ஒரு நடுவர் இப்படி நடந்து கொள்ளலாமா. இதை நான் கண்டிப்பாக விடமாட்டேன் என்று கோபமாக பேசியுள்ளார்.

தற்போது நாடியா கான் அந்த ஹாலிவுட் நடிகர் மீது போலீஸில் புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.