Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்னது சிருஷ்டி டாங்கே நிர்வாணமாக நடிச்சாங்களா? அடப்பாவிகளா சொல்லவே இல்லை என புலம்பும் ரசிகர்கள்
தமிழ்சினிமாவில் சர்ச்சைக்குரிய காட்சிகள் சினிமாவில் இடம் பெறுவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில்தான் அமலா பால் ஆடை என்ற படத்தில் துணி இல்லாமல் நடித்தார். தற்போது அதேபோல் ஸ்ருஷ்டி டாங்கே என்ற நடிகை நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துப்பறியும் திரில்லராக சேரன் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜாவுக்கு செக். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாக திருப்திகரமாக செல்லவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றியதற்காக சேரன் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பாராட்டியுள்ளார்.
ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும்..
இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது…
மிக்க நன்றி @srushtiDange https://t.co/3wsVTuz3iC— Cheran (@directorcheran) January 29, 2020
சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கதைக்கு தேவை என்பதால் நிர்வாணமாக நடிக்க தயங்காமல் தைரியமாக நடித்த சிருஷ்டி டாங்கே என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சிருஷ்டி டாங்கே நன்றி கூறியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அடப்பாவிகளா இந்த பொண்ணு நிர்வாணமாக நடித்து இருக்குன்னு சொல்லவே இல்லையே என தற்போது ராஜாவுக்கு செக் போடப்பட்டுள்ள திரையரங்கை நோக்கி படை எடுக்கின்றனர்.
