fbpx
Connect with us

ஹீரோ சிவகார்த்திகேயன், வேலைக்காரன் படக்குழு பற்றி மனம் திறந்த சார்லி.

News / செய்திகள்

ஹீரோ சிவகார்த்திகேயன், வேலைக்காரன் படக்குழு பற்றி மனம் திறந்த சார்லி.

வேலைக்காரன் படம் 22ஆம்  வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது, மேலும் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கி விட்டது.

வேலைக்காரன்

வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் அறிவு என்ற  குப்பத்து வாலிபராக நடித்துள்ளார். அவர் பணி புரியும் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக மலையாள நடிகர் பகத் ஃபாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சிவகார்த்திகேயனின்  அக்கா வேடத்தில் சினேகாவும், தந்தை வேடத்தில் சார்லியும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன், மற்றும் படக்குழு பற்றி பிரபல இணையத்தளம் ஒன்றிற்கு சார்லி பேட்டி அளித்துள்ளார். அதன் தொகுப்பு பின் வருமாறு.

வெகு சிலரிடம் மட்டும் தான்  நாம் மனதளவில் மிக  குறுகிய காலத்திலேயே நெருக்கம் ஆகிவிடுவோம் . அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன்.இப்படத்தில், திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது இந்த எளிமையும், எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் -தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாகியுள்ளது.

இப்படத்தில் எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். மகனின் முக்கியமான முடிவுகளுக்கு  துணை நிற்கும்  தந்தை கதாபாத்திரம் என்னுடையது.

இயக்குனர் மோகன் ராஜா, ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் ஆகியோர் வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப்பெரிய தொழில் வித்தகர்கள் என்று தான் கூறவேண்டும். மோகன்ராஜா  திறமைசாலி.” என்று கூறியுள்ளார் நடிகர் சார்லி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top