Connect with us

Cinemapettai

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் பாலா சிங்.. சோகத்தில் சினிமா வட்டாரம்

bala singh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் பாலா சிங்.. சோகத்தில் சினிமா வட்டாரம்

நடிகர் பாலா சிங் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். சினிமாவில் மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். சினிமா வாய்ப்பு தேடி வந்த இவருக்கு மலையாள சினிமா கைகொடுத்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு 1995ஆம் ஆண்டு நாசர் மற்றும் ரேவதி நடிப்பில் வெளிவந்த அவதாரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு திறமையை கண்டு தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அந்தவகையில் கமலஹாசன், ஷங்கர், மணிரத்னம் என முன்னணி இயக்குனர்கள் அனைவரின் படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். சமீபகாலமாக இவர் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வந்தார்.

அந்த வகையில் புதுப்பேட்டை படத்தில் இவர் கூறிய அது அவ்வளவு தான் டைம் முடிஞ்சு போச்சு என்ற வசனம் இன்றளவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. இறுதியாக இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த என்ஜிகே திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் உயிர் நீத்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top