
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் அண்ணாத்த. தற்போது அண்ணாத்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளில் ரஜினிக்கான காட்சிகள் மட்டும் முடிவடைந்து விட்டதாம். இதனால் ரஜினி விரைவில் சென்னை வர உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மீதம் உள்ள சின்னச்சின்ன காட்சிகளை எடுப்பதற்காக மேலும் ஒரு வாரம் தொடர்ந்து அங்கேயே தங்கி மொத்தத்தையும் முடித்துவிட்டு சென்னை வர பிளான் செய்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினி படத்திற்காக சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா கிட்டத்தட்ட 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்துள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பாலா தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
கடைசியாக அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான வீரம் படத்தில் ஐந்து தம்பிகளில் மூத்த தம்பியாக நடித்திருந்தார். கமர்சியல் படம் என்பதால் பெரிய அளவு இவர்களது கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கதாபாத்திரம் படம் வெளியான பிறகு பேசப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிறுத்தை சிவா இயக்கி வரும் அண்ணாத்த திரைப்படம் வருகின்ற தீபாவளி 2021 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
