Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிலிம் பேர் விருது விழாவை தவிர்த்த முன்னணி நடிகர்களை பாராட்டிய நடிகர் சங்கம்

நடிகர் சங்கத்தின் உத்தரவின் பேரில் முக்கிய விருதாக கருதப்படும் பிலிம்பேர் விழாவை தவிர்த்த நடிகர்களை, விஷால் செமையாக பாராட்டி இருக்கிறார்.

நாசர் தலைமையிலான நடிகர்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்ற பிறகு, பல விஷயங்களில் தங்கள் முயற்சிகளை கையில் எடுத்துள்ளனர். அதிலும், பொதுச் செயலாளர் விஷால் தன்னால் முடிந்த வகையில் தமிழ் திரைப்பட நடிகர்களின் நன்மைக்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறார். நலிந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை, பல நடிகர்களின் பிரச்சனைக்கு முன்னின்று தீர்வு என பல வழிகளில் பணியாற்றி வருகின்றார். சமீபத்தில், தயாரிப்பாளர் சங்கம் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து 50 நாளுக்கு அதிகமாக போராடியது. இதனால் கோலிவுட் வட்டாரமே ஸ்தம்பித்தது. இதை தொடர்ந்து, அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. நடிகர் சங்கமும் தற்போது தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இது குறித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில், திரைப்பட விழாக்கள், விருது நிகழ்வுகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. அந்த நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் கலந்து வருகின்றனர். ஆனால், சமீபமாக அது வியாபார நோக்கில் நடத்தப்படுகிறது. ஆனால் அந்த பயன் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை. இதனையடுத்து, நடிகர் சங்க சிறப்புக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

பொருளாதார ரீதியாக நட்சத்திரங்கள் பயன் பெறவில்லை என்றால் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடை தருபவர்கள் நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சில நிகழ்ச்சிகளில் பணம் பெற்று நடிகர் சங்க அறக்கட்டளை செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நடைமுறையை ஐதராபாத்தில் ஃபிலிம்பேர் விருது குழு ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த நடிகர், நடிகைகளிடம் கலந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தோம். அதை ஏற்று அவ்விருது விழாவைத் தவிர்த்த நயன்தாரா, குஷ்பு சுந்தர், விஜய்சேதுபதி, கார்த்தி மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top