fbpx
Connect with us

Cinemapettai

சுமாராதான் இருக்கு குமாரு என அஜித்தை கலாய்த்த ஆர்யா.. பொங்கி எழுந்த தல ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுமாராதான் இருக்கு குமாரு என அஜித்தை கலாய்த்த ஆர்யா.. பொங்கி எழுந்த தல ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிளேபாய் என்ற இமேஜ் உடன் வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் ஆர்யா. திருமணத்திற்கு பிறகு பொட்டி பாம்பாய் அடங்கி விட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள். நல்ல திறமை இருந்தாலும் சரியான திரைக்கதையை தேர்ந்து எடுக்க முடியாததால் பெரிய ஹீரோவாக தற்போது வரை அவரால் நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை.

கடந்த வருடம் வெளியான மகாமுனி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. மேலும் வசூல் ரீதியாகவும் அந்த படம் அவருக்கு வெற்றி தான் என்கிறது தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ். இதனால் தற்போது டெடி என்ற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

அவ்வப்போது இரண்டாவது ஹீரோவாகவும் நடிக்க தவறமாட்டார். சமீபத்தில்கூட சூர்யாவுடன் காப்பான் என்ற படத்தில் நடித்திருந்தார். அதேபோல 2013 ஆம் ஆண்டு வெளியான ஆரம்பம் படத்திலும் தல அஜீத்துடன் நடித்து இருப்பார். நடிகர் அஜித் எப்போதுமே தனது பட குழுவினருக்கு படப்பிடிப்பின்போது பிரியாணி செய்து தருவது வழக்கம்.

இந்நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் ஆர்யாவிடம், தல அஜித் செய்த பிரியாணி சாப்பிட்டீர்களா? எப்படி இருந்தது? என கேட்டுள்ளார். அதற்கு ஆர்யா, அனைவரும் சொல்வதைப் போல நானும் பெரிதாக எதிர்பார்த்தேன். ஆனால் அஜீத் செய்த பிரியாணி சுமாராகத்தான் இருந்தது. அதைவிட எங்க அம்மா நன்றாக செய்வார்கள் என விளையாட்டுக்கு கூறியுள்ளார்.

இதுவரை அஜீத் உடன் நடித்தவர்கள் அவரது பிரியாணியை ஆகா ஓகோ என புகழ்ந்துள்ளனர். ஆனால் ஆர்யா மட்டும் இவ்வாறு கூறியது அஜித் ரசிகர்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்யாவின் விளையாட்டு தற்போது வினையாகி விட்டது.

இதனை கேள்விப்பட்ட தல ரசிகர்கள் இதுவரை ஆர்யாவின் மீது எவ்வளவு கோபம் இருந்ததோ அதை மொத்தமாக இணையதளங்களில் கொட்டி தீர்த்து வருகின்றனர்.

காது கருகிடும் போல!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top