சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சம்பளம் எல்லாம் ஏறிப்போச்சு, இப்போ வந்தா எப்படி.. வளர்துவிட்டவர்களுக்கு டிமிக்கி கொடுக்கும் ஆர்யா

ஆர்யா தற்போது கேப்டன், நலன் குமாரசாமி இயக்கும் திரைப்படம் என்று பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இன்னும் சில பெரிய தயாரிப்பாளர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கும் இவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஆரியா ஒருகாலத்தில் படங்கள் ஓடாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பொழுது அவரை வைத்து பல தயாரிப்பாளர்கள் படமெடுத்து அவருக்கு சினிமாவில் ஒரு அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தனர். அந்த வகையில் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவருக்கு பக்கபலமாக இருந்தனர்.

இப்பொழுது ஆர்யா நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். வரிசையாக 3 படங்கள் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஒருசில படத்தின் வெற்றிக்கு பிறகு தான், ஆர்யா நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் ஒரு முன்னணி நடிகராக தன்னுடைய மார்க்கெட்டை அவர் நிலைநிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில் பழைய தயாரிப்பாளர்கள் படம் பண்ணுவதற்காக ஆர்யாவை அணுகியுள்ளனர். இப்பொழுது ஆர்யா பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார்.

இப்படிப் அவரை வளர்த்துவிட்ட பழைய தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணுவதால் சம்பள விஷயத்தில் நிறைய அட்ஜஸ்ட்மென்ட்கள் செய்ய வேண்டியதிருக்கும் என்ற காரணத்தினாலேயே ஆர்யா அவர்களை டீலில் விட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்களும் ஆரம்பகாலத்தில் தங்களை வளத்துவிட்ட தயாரிப்பாளர்களை கண்டு கொள்வது கிடையாது. இதனால் தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள் கூட தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி வருகிறார்கள்.

- Advertisement -

Trending News