Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி விஜய்யின் ஒத்த வார்த்தை என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.. நெகிழ்ந்த முன்னணி நடிகர்
தளபதி விஜய் பற்றி புகழ்ந்து பேசாதே சினிமா கலைஞர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவு நிறைய மனிதர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளார். தன்னால் முடிந்த அளவுக்கு எந்த உதவியும் செய்ய துணிந்தவர்.
இந்நிலையில் நடிகர் அருண்விஜய் சினிமாவிற்கு வந்த புதிதில் ஒரு வெற்றி கிடைக்காமல் தடுமாறி வந்தார். இதனால் உறவினர்களின் அறிவுரையை கேட்டு பெரிய நடிகர்களை வைத்து தயாரிப்பாளராக மாறி விடலாம் என யோசித்து தளபதி விஜய்யிடம் பேச சென்றுள்ளார்.
அப்போது தளபதி விஜய், நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள், மேலும் ஆக்சன் காட்சிகள் கூட அருமையாக செய்கிறீர்கள், பிறகு ஏன்? தயாரிப்பாளராக மாறிய நினைக்கிறீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தயவு செஞ்சு நடிப்பை கைவிட வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு திரும்ப வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு நிமிடம் யோசித்து, மீண்டும் நடிகராகவே இருக்க விரும்புவதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்.
இதனால் இன்றளவும் தளபதி விஜய்யின் மேல் தனி மரியாதை உள்ளது என வெளிப்படையாகவே கூறியுள்ளார், அருண் விஜய்.
