fbpx
Connect with us

Cinemapettai

கையில் ராட்சச கழுகுடன் அருண் விஜய்.. முகத்தில் ஒரு பயம் தெரியுது பாஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கையில் ராட்சச கழுகுடன் அருண் விஜய்.. முகத்தில் ஒரு பயம் தெரியுது பாஸ்

நடிகர் அருண் விஜய் சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் எப்போதும் தனது முயற்சியை மட்டும் நம்பியே இருப்பார் அதனால் தனக்கான இடத்தை தனது முயற்சியால் மட்டுமே பூர்த்தி செய்வார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் தடம் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது, மேலும் இதற்க்கு முன் இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தடையறத்தாக்க தடம் குற்றம்23 போன்ற படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.

தற்போது அருண்விஜய், ராட்சச கழுகு ஒன்றை கையில் பிடித்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் பயங்கரமாக பரவி வருகிறது.

மேலும் அந்த புகைப்படத்தில் வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது, தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது என்ற வாசகத்தையும் பதிவு செய்திருந்தார்.

arun-vijay

arun-vijay

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top