Tamil Cinema News | சினிமா செய்திகள்
அம்மாடியோவ்! கொடூர நாயுடன் கொஞ்சி விளையாடும் அருண் விஜய்.. கடிச்சா சங்குதான்
நீண்ட நாட்களாக வெற்றிக்கு காத்துக் கொண்டிருந்தவருக்கு தொடர் வெற்றிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. விடாமுயற்சி செய்தால் விஸ்வரூப வெற்றி கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் நடிகர் அருண் விஜய்.
நீண்ட நாட்களாக சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொள்ள கிட்டத்தட்ட அவருக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது. என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு அவரது சினிமா கிராப் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. முயற்சிக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கி வருகிறார். அருண் விஜய் செல்லமாக ருத்ரா என்ற நாய் ஒன்றை நீண்டகாலமாக வளர்த்து வருகிறார்.
பார்ப்பதற்கே கொடூரமாக இருக்கும் இந்த நாயை அருண்விஜய் கொஞ்சி கொண்டிருப்பது பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த நாய் கடித்தால் உடம்பில் கரியே மிஞ்சாது என்பது உறுதி.
தப்பித் தவறி கூட அருண்விஜய் வீட்டுப்பக்கம் போயிடாதீங்க.!

arun-vijay
