சினிமாவைப் பொருத்தவரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். மற்ற மொழிகளைக் காட்டிலும் தென்னிந்திய மொழிகளில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகம்தான்.
அதிலும் தெலுங்கு நடிகர்களைப் பொறுத்தவரை 90 சதவிகித நடிகர்கள் வாரிசு நடிகர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால் தற்போது தமிழில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறைந்து தொலைக்காட்சிகளில் இருந்து நிறைய நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இது ஒருபக்கம் ஆரோக்கியமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் வாரிசு நடிகர்களில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிலரும் பல்வேறு அவமானங்களை சந்தித்துவிட்டு தற்போது தான் கொஞ்சம் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதில் சில வாரிசு நடிகர்கள் தடம் தெரியாமல் அழிந்து விட்டனர்.
அப்படி பல வருடங்களாக சினிமாவில் நடித்தாலும் கடந்த சில வருடங்களாகத்தான் அருண் விஜய்க்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வெற்றியை சுவைக்க அவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் போராட வேண்டியதாயிற்று.
என்னை அறிந்தால் திரைப்படம் அவரது கேரியரில் மாற்றி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வளம் பெற வைத்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவருடைய அப்பா நடிகர் விஜயகுமாரின் முதல் காருடன் அருண் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.