Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் குடும்ப புகைப்படம்..
கோலிவுட்டில் அதிரடி மன்னனாக வலம் வரும் அர்ஜூன் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அர்ஜுன். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரம் எடுத்தவர். முதல்முறையாக தமிழ் சினிமாவில் கராத்தே கற்று கொண்டு அறிமுகமான நாயகன் என்பதால் இவரின் சண்டை காட்சிகள் வாவ் சொல்லும் ரகம். அதனாலே, இவரை ரசிகர்கள் ஆக்ஷன் கிங் அர்ஜூன் என செல்லப்பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ஜென்டில் மேன் மற்றும் முதல்வன் படங்கள் இன்றுமே இவரின் திரை பயணத்தின் முக்கிய படங்களாக பார்க்கப்படுகிறது. கர்நாடகாவை பிறப்பிடமாக கொண்ட அர்ஜூன், கன்னட திரையுலகில் பிரபலமாக இருந்த ராஜேஷின் மகள் நிவேதிதாவை திருமணம் செய்து கொண்டார். இதில் பலருக்கும் தெரியாத ஒரு சுவாரசியமே இருக்கிறது. திருமதி அர்ஜூன் இதுவரை ஊடகத்தில் பெரிதாக தென்படவில்லை. அதனால், அவர் நடிப்பு வாசனையே இல்லாமல் வந்தவர் இல்லை.
நிவேதிதாவே கன்னடத்தில் ராதா சப்தமி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகே நடிப்பை விட்டு விட்டாராம். அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சமீபத்தில் இவரின் இரண்டாவது படமான சொல்லிவிடவா வெளியாகி இருக்கிறது. இப்படத்தை அர்ஜூனே இயக்கி தயாரித்தார்.
இக்குடும்பத்திலே நடிப்புலகில் இருந்து இப்போது வரை சற்று ஒதுங்கியே இருப்பவர் அர்ஜூனின் இரண்டாவது மகள் தான். இரண்டாவது மகள் சஞ்சனா பெரிதாக வெளியில் தலை காட்ட மாட்டார்.
இந்நிலையில், இந்நால்வரும் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜூன் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் இரும்புதிரை படத்தில் வில்லன் வேடம் ஏற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
