Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ்-அம்மாவின் மரணம் தெரிந்தும் தயாரிப்பாளரை காப்பாற்றிய பிரபலம்.. செய்யும் தொழிலே தெய்வம்
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டிக் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
16 போட்டியாளர்களும் தங்களுடைய கடந்து வந்த கடுமையான பாதைகளை சக போட்டியாளர்களுக்கு பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள பிக் பாஸ் வாய்ப்பளித்து உள்ளது.
இதில் ஆரி பிக்பாஸ் வீட்டில் மூன்றாவது நாளில் தனது சினிமா பயணத்தை பகிர்ந்து கொண்டார்.
அதில் “நான் பழனியில் பிறந்து அங்கேயே எனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சினிமாவில் ஏற்பட்ட ஆர்வத்தால் என்னுடைய அப்பா, செயினை விற்று பத்தாயிரம் ரூபாயை கையில் கொடுத்தார்.
அதை வைத்துக்கொண்டு சென்னைக்கு ஒரு மஞ்ச பையை கையில புடிச்சிகிட்டு வந்தேன். இயக்குனரும் நடிகருமான சேரன் எனக்கு ஒரு பட வாய்ப்பைக் கொடுத்தார்.
ஆனால் அந்த படமும் திரையரங்கில் திரையிடாமல் எனக்கு தோல்வியே கிட்டியது. அதன்பின் அடுத்த படத்தில் நான் நடித்த கதாநாயகியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
எனது மனைவியின் சப்போட்டால் ஒரு கின்னஸ் சாதனை செய்யும் அளவுக்கு உயர்ந்தேன். அதன்பின் ஒரு வெற்றிப் படம் நடித்து ரிலீஸ் செய்த போது அதை பார்த்து சந்தோசப்பட எனது அப்பா உயிரோட இல்லை.
பிறகு எனது அம்மா மாடி படியில் விழுந்து தலையில் பலத்த அடிபட்டு ஒரு குழந்தை போலவே மாறிவிட்டார்.
அதுக்கப்பறம் 20 லட்சம் பொருட் செலவில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று எனது அசிஸ்டன்ட் கண்ணீரும் கம்பலையுமாக என் முன் நின்று அம்மா இப்போ உயிரோட இல்ல சார் கூறியதன் மூலம் என்று எனது அம்மாவின் இறப்பை அறிந்து கொண்டேன்.
அந்த சமயம், இயக்குனர் தயாரிப்பாளர்கள் எல்லாம் நீங்கள் கிளம்புங்க, போய் அம்மாவின் இறுதிச்சடங்கை நல்லபடியாக முடிங்க என்று சொன்னாங்க, ஆனா என்னால் பிறருக்கு 20 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படக் கூடாது என்று அந்த படத்தை முடித்துவிட்டு பிறகு எனது அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன்.
அந்தக் கடினமான சூழலை நான் எதிர்கொண்டாலும் சமூக வலைதளங்கள் என்னை, “அம்மாவின் மரணத்தில் ஆதாயம் தேடும் நடிகர்” என்று சித்தரித்தது எனக்கு பெரும் வலியை தந்தது.
நான் 15 வருடம் கழித்துதான் இந்த பிக்பாஸில் நுழைய முடிந்தது, வெளியில் இருக்கும் இளம் தலைமுறையினருக்கு நாம் நேர்மையாக விளையாடி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று பாசிட்டிவ்வாய் பேசி சக போட்டியாளரை நெகிழ வைத்தார் நடிகர் ஆரி.

biggboss-aari-cinemapettai
