Connect with us

Cinemapettai

நொந்து போன அரவிந்த்சாமி.. திறமைக்கு வந்த சோதனை

aravind-swamy-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நொந்து போன அரவிந்த்சாமி.. திறமைக்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்தது 100 முதல் 200 வரை புதிய நடிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவை பொறுத்தவரை யாரின் மூலம் அறிமுகமாகிறோம் என்பது முக்கியம். அந்தவகையில் மணிரத்தினம் என்ற கலைச் சிற்பியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி.

roja

roja

பார்த்தவுடனே பிடித்துவிடும் நடிகர். ரஜினியின் தம்பியாக அறிமுகமான அரவிந்த்சாமி, பின்னர் மணிரத்தினத்தின் ரோஜா படம் மூலம் கதாநாயகனாக காலடி பதித்தார். சிறந்த படமாக உருவான அந்த படம் அவருக்கு விருது வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு பெயர் பெற்றது.

வழக்கம்போல் ஹிட் கொடுத்த நடிகர் என்பதால் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அவரை மொய்க்க ஆரம்பித்தனர். அவரும் தயாரிப்பாளர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி கதை தேர்வில் கோட்டை விட்டார். ரோஜா படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து-பதினைந்து படங்கள் நடித்திருந்தாலும் கடைசிவரை அவருக்கு ரோஜா பட அரவிந்த் சாமி என்ற பெயர் மட்டுமே இருந்தது.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சூழ்ச்சி தெரியாமல் வசமாக சிக்கிக்கொண்டார். பின்னர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வழுக்கை தலையும், தொப்பையுமாக மாறியவரை தமிழ் சினிமா கைவிட்டது. வாழ்க்கையே வெறுத்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அரவிந்த்சாமியை மீண்டும் கை கொடுத்து தூக்கி விட்டார் மணிரத்னம்.

aravind-swamy

aravind-swamy

இந்த முறை கடல் படத்தின் மூலம் நல்ல கதாபாத்திரம் அமைந்தது. ஆனால் அதில் வில்லனாக நடித்த அர்ஜுன் மொத்த விருதுகளையும் தட்டிச் சென்றுவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவருக்கு தனி ஒருவன் படம் தடம் பதிக்க உதவியது.

வெற்றிக்கு வெறித்தனமாக உழைத்துக் கொண்டிருந்தவருக்கு போனஸ் கிடைத்ததைப் போல தனி ஒருவன் படம் அமைந்தது. இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து செம ஸ்டைலிஸ் ஆக மாறினார். தொடர்ந்து சில படங்களில் வில்லனாக நடித்தவரை, மீண்டும் தயாரிப்பாளர்கள் சூழ்ச்சி செய்து வீழ்த்தி விட்டனர்.

மறுபடியும் ஹீரோ ஆசை எட்டி பார்க்க, தொடர்ந்து பல படங்களில் அடி. நம்பிக்கை இழந்தவருக்கு நரகாசுரன் என்ற படம் கை கொடுத்தது. ஆனால் அதன் தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன் என்பதால் படம் பெட்டிக்குள் முடங்கியது. இப்போது மீண்டும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

திறமையான நடிகர் தற்போது பணத்துக்காக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது போய் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

சினிமாவில் தடம் மாறும் இன்றைய இளைய நடிகர்களுக்கு அரவிந்த் சாமி போன்றோரின் வாழ்க்கை வரலாறு மிக முக்கிய ஒன்றாகும். சினிமாவுக்கு உண்மையாக இருந்தால் சினிமாவே உங்களுக்கு தேவையானதை செய்யும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அப்படி உயர்ந்தவர்கள் தான் தற்போது முன்னணி நாயகர்களாக வலம் வருகின்றனர்.

கண்டிப்பாக மறுபடியும் அரவிந்த் சாமி மீண்டெழுவார் என்பதில் சந்தேகமில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top