Tamil Cinema News | சினிமா செய்திகள்
மனுசனே இல்லை! பாலாவைக் குதறி தள்ளிய நான் கடவுள் நடிகர்
பாலாவை பற்றி எந்த செய்தி வந்தாலும் அவர் படங்களை போலவே பயங்கர கொடூரமாக இருக்கிறது. மலையூர் மம்பட்டியான், அன்புள்ள ரஜினிகாந்த், சோலைக்குயில் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி இவர் பெயரை சொன்னால் தெரியாது என் போட்டோவை பார்த்தால் தெரியும் இவர்தான் நான் கடவுள் படத்தில் நடித்தவர்.
இவர் தான் பாலா மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். நான் பல படங்களை தயாரித்து பின்னர் அதில் நஷ்டமானதால் சீரியல்களைதயாரித்தேன். என்னை பாலா என்னை நான் கடவுள் படத்தில் நடிக்க அழைத்த போது நான் பாலாவிடம் முதலில் முடியாது என்று தான் சொன்னேன். இருந்தாலும் விடாமல் என்னை கேட்டுக்கொண்டே இருந்ததால் நான் ஒப்புக்கொண்டேன். அதற்காக நான் 1 வருட காலம் தாடி எல்லாம் கூட வளர்த்தேன். என் அம்மா இறந்த போது கூட நான் தாடி எடுக்காமல் தான் கொல்லி வைத்தேன். ஆனால், எனக்கு பாலா கொல்லி வைத்து விட்டான் என மிகுந்த ஆவேசமாக பேசினார்.
மேலும் நான் ஒரு முறை ஒரு பேட்டியில் படம் குறித்து பேசினேன் பாலா என்னிடம் கோபித்துக் கொண்டு யாரை கேட்டு நீங்கள் இந்த படத்தில் நடிச்சிருக்கீங்கனு சொன்னீங்க என்றார், நான் அதற்கு அவரிடம் மன்னிப்பும் கேட்டேன். ஆனால் என்னுடைய பெயர் திரையில் ஒரு ஓரத்தில் தான் போடப்பட்டது.
அவனுக்கு நடிக்கவே தெரியாது ஒரு முறை கூட மற்ற நடிகர்களுக்கு அவன் நடித்து காண்பித்ததே இல்லை. எங்கள் இஷ்டத்திற்கு தான் நடிக்க சொல்வார். அவன் ஒரு சாடிஸ்ட் நான் கடவுள் படத்திற்கு பிறகு அவர் ஏதாவது ஹிட் படத்தை கொடுத்தாரா? அவன் படம் ஒன்னும் ஓடாதது என் சாபங்கள் கண்டிப்பாக பழிக்கும் பாருங்கள் என்று கண்ணீர் மல்க கூறினார் இதற்கு பாலாவின் பதில் தான் என்ன?
