fbpx
Connect with us

Cinemapettai

நண்பரின் கடனுக்காக இரவு-பகலாக உழைக்கும் நடிகர் சசிகுமார்.. என்ன மனுஷன்யா இவரு.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நண்பரின் கடனுக்காக இரவு-பகலாக உழைக்கும் நடிகர் சசிகுமார்.. என்ன மனுஷன்யா இவரு.!

சசிகுமார் இயக்குனர் நடிகர் என்பதையெல்லாம் தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை அவரது நடவடிக்கைகள் எப்போதுமே பிரதிபலிக்கும். அந்த வகையில் தனது நண்பரின் கடனுக்காக மாடாய் உழைத்து கொண்டிருக்கிறார் என்பதை கேட்டு உடல் மெய்சிலிர்க்கிறது.

தரமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து அதை கிராமத்து வாசனையோடு மக்களுக்கு விருந்தளிப்பவர் சசிகுமார். சமீபகாலமாக ஒரு ஹிட் கொடுக்க தடுமாறி வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் இறந்தது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

அவர் பல கோடி ரூபாய் கடனை விட்டுவிட்டு இறந்ததால் தற்போது அதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் சசிகுமார். நண்பனின் குடும்பம் கெட்ட பெயர் எடுத்து விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து எட்டு படங்களில் கமிட்டாகி மொத்த சம்பளத்தையும் அந்த குடும்பத்தின் கடனுக்காக கொடுத்து வருகிறார்.

நாடோடிகள் 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா, பரமகுரு, ராஜவம்சம், நானா போன்ற படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும் பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

சினிமாவில் இந்த மாதிரி நல்ல மனிதர்கள் கிடைப்பது மிகவும் அரிது. உண்மையிலேயே நட்புக்கு பெரிய இலக்கணம் சார் நீங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top