Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபுதேவா மகன் இப்படித்தான் இறந்தாரா? கல் நெஞ்சமும் கதறி அழும் சோகம்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து பின் முன்னணி ஹீரோவாக முன்னேறியவர் பிரபுதேவா. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த இவர், திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இயக்குனராகி விட்டார்.
தளபதி விஜய்யை வைத்து இவர் இயக்கிய போக்கிரி திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதன் பிறகுதான் இவருடைய வாழ்க்கையில் மிகவும் சோகமான விஷயம் வந்துள்ளது.
என்னதான் பிசியான நடிகராக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதை எப்போதும் தவறவிட மாட்டார் பிரபுதேவா. இவருக்கு லதா என்ற மனைவியும் 3 மகன்களும் இருந்தனர். அதில் ஒருவர்தான் விஷால்.
விஷாலுக்கு திடீரென புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் கவலையில் உறைந்த பிரபுதேவா, எப்படியாவது தன் மகனை காப்பாற்றி விடுவோம் என்று நினைத்து ஆறு மாதம் தொடர்ந்து சிகிச்சையில் வைத்திருந்தார். இருந்தும் விஷாலை காப்பாற்ற முடியவில்லை.
2008ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி விஷால் தனது உயிரை நீத்தார். இதனால் மிகவும் உடைந்து போன பிரபுதேவாவை, திசை திருப்பியது அவரது வேலை. இப்போது மகனின் நினைவுகளிலிருந்து மீண்டு வருவதற்காகவே தொடர்ந்து படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.
என்னதான் வேலைகளில் ஈடுபட்டிருந்தார் பெற்ற மகன் தன் கண் முன்னே இறந்தது கொடுமையிலும் கொடுமை தான்.
