Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்லீ வேஸ்ட்.. பிகில் பத்தி கேக்காதீங்க.. குமுறும் நடிகர் ஆனந்தராஜ்
2019ஆம் ஆண்டு தீபாவளியன்று தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். கால்பந்தாட்ட த்தை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்தை அட்லீ பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தார். மேலும் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.
நடிகர் ஆனந்தராஜ் பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக பட வெளியீட்டுக்கு முன்பு கூறி வந்தார். ஆனால் படம் வெளியான பின்பு பேச்சு மூச்சு இல்லாமல் ஆனந்தராஜ் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று ஆனந்தராஜ் பேட்டி எடுத்து அவரது கோபத்தை கிளறி உள்ளது.
அவர் கூறியதாவது, பிகில் படத்தில் ஏன் நடித்தாய் என்று என்னை அனைவரும் திட்டினார்கள். காரணம் நான் நடித்த காட்சிகளை அனைத்துமே வெட்டி எறிந்து விட்டனர். எனக்கு ஒரு இன்ட்ரோ சீன் கூட வைக்காமல் இருந்தால் அப்புறம் எதற்கு நான் வெட்டியாக நடிக்க வேண்டும்.
என்னுடைய உழைப்பும் வீணாகி விட்டது. உனக்கு என்ன தலையெழுத்தா என்று என் உறவினர்கள் கேட்டார்கள். அதுவும் கரெக்டுதான். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்து என்ன பயன். படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருந்தால் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்திருக்காது எனவும் மொத்தமாக போட்டு உடைத்து விட்டார்.
சமீபகாலமாக ஆனந்தராஜ் நடிக்கும் காமெடி காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் பிகில் படத்தில் அவரது நடிப்பை அனைவரும் எதிர்பார்த்தது உண்மைதான்.
