Tamil Cinema News | சினிமா செய்திகள்
திடீரென பிரிக்கப்படும் அமிதாப் பச்சனின் 2800 கோடி சொத்து.. என்னாச்சு அவருக்கு?
பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன். காலங்கள் கடந்தும் சினிமாவில் உயர்ந்து நிற்பவர். ஆனால் சமீபகாலமாக அமிதாப் பச்சனின் உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆம். 76 வயதை கடந்த அமிதாப்பச்சனுக்கு 1982இல் படப்பிடிப்பின் போது ஒரு விபத்து ஏற்பட்டது. உடனடியாக இரத்தம் தேவைப்பட்ட நிலையில் புதிய ரத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த ரத்தத்தில் ஹெப்படீஸ் பி என்ற வைரஸ் இருந்துள்ளது.
இதனால் நாளடைவில் அமிதாப்பச்சனின் கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருந்தும் சமீபகாலமாக சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இதனால் தற்போது 75 சதவிகித கல்லீரல் தற்போது செயலிழந்து உள்ளதாக தெரிகிறது.
தனது மொத்தம் 2800 கோடி சொத்துக்களையும் சரிசமமாக இரண்டு பங்கீடுகளாக பிரித்து எழுதி வைத்துள்ளார். இவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும் சுவேதா என்ற மகளும் உள்ளனர்.
சமீபத்தில் ஒரு விழாவில் தனது சொத்துக்களுக்கு மகன் அபிஷேக் பச்சன் மட்டுமே என்றும் சொந்தம் கொண்டாட முடியாது என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
