14 வயதில் பாலியல் துன்பத்திற்கு ஆளானேன்.. பரபரப்பை கிளப்பிய பிரபல ஹீரோவின் மகள்!

பிரபல இந்தி நடிகர் ஆமிர் கான், இவருடைய முதல் மனைவி ரீனா தத்தா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும் இரா கான் என்ற மகளும் உள்ளனர்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். ஜுனைத், இரா கான் இருவரும் அம்மா ரீனா தத்தாவுடன் வசித்து வருகின்றனர்.

23 வயதான இரா கான், தனது 14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். நான்கு வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தற்போது மீண்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.

14 வயதாக இருக்கும் போது தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாகவும், அறியாத வயதால், அவர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்து தான் செய்கிறாரா என்பது பற்றி தெரியவில்லை.

அவர் எனக்கு தெரிந்தவர்தான், இருந்தாலும் அது தினமும் நடக்கவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு ஒரு வருடம் ஆனது.

அது புரிந்ததும், உடனடியாக என் பெற்றோருக்கு மெயில் அனுப்பினேன். பின்னர் நானே இந்தப் பிரச்சனையில் இருந்து வெளியேறிக் கொண்டேன். என அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

amir-khan
amir-khan