பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் மட்டுமல்ல சமூக சேவை புரிவதிலும் ஆர்வம் கொண்டவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்தன.

அமீர்கானின் பேச்சுக்கு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக அமீர்கான் கருதினால் அவர் பாகிஸ்தானில் குடியேறலாம் என்று கூறினார்.

இந்த சர்ச்சையால் அமீர்கானின் படங்கள் புறக்கணிக்கப்பட்டன. மேலும் நெருக்கடிகள் அதிகமாகவே அவரது மனைவி கிரண்ராவ் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா? என கேட்டதாகவும் அமீர்கான் கூறினார்.

இந்நிலையில் 2016ம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் டங்கல் திரைப்படம் வெளியானது. பெண் குழந்தைகளை மல்யுத்த வீராங்கனைகளாக்கும் கதைக்களத்தில் மிக நேர்த்தியாக பெண் குழந்தைகளின் எதிர்கால திட்டங்கள், வறுமை சூழ்நிலையில் எவ்வாறு முன்னேறுவது போன்ற அம்சங்களோடு படமாக்கப்பட்டிருந்தது.

அதிகம் படித்தவை:  சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

இந்த படம் உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டங்கல் படத்தை பாகிஸ்தானில் வெளியிட வேண்டுமானால் இந்திய தேசிய கீதம் ஒலிக்கும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியது.

அதற்கு ”அப்படி, இந்திய தேசிய கீதத்தை நீக்கிவிட்டு பாகிஸ்தானில் எனது படத்தைத் திரையிடவேண்டடிய அவசியம் எனக்கு இல்லை. இந்திய தேசிய கீதத்துடன்தான் பாகிஸ்தானில் ‘டங்கல்’ படம் ரிலீஸ் ஆகும். இல்லையென்றால், பாகிஸ்தானில் `டங்கல்’ படம் வெளியாகாது” என அமீர் கான் பதிலடி கொடுத்திருந்தார்.

அதிகம் படித்தவை:  என் படுக்கை அறையில் நடப்பதை பற்றி ஏன் பேசுகிறார்கள்? நடிகை கஸ்தூரி கொதிப்பு

பாகிஸ்தானுக்கு அமீர்கான் கொடுத்த பதிலடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பழைய கோபத்தை மறக்க செய்தது. தற்போது மும்பையில் நடந்த விழாவில் அமீர்கானுக்கு ‘விசேஷ் புஷ்கார்’ விருதை தன் கைகளால் வழங்கியுள்ளார் மோகன்பகவத்.

பொதுவாக எந்தவொரு தனியார் அமைப்புகள் நடத்தும் விருது விழாவில் கலந்து கொள்ளாத அமீர்கான், தனது கொள்கைகளை தளர்த்திவிட்டு இந்த விழாவில் மோகன்பகவத்துடன் தோன்றியிருக்கிறார்.