சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் திரைப்படத்தின் டீசர் அஜித்குமாரின் பிறந்தநாளான மே 1-ம் தேதி 00:01 மணிக்கு வெளியாகும் என முன்னதாக கூறப்பட்டது.

இதனை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் எடிட்டர்கள் கூட உறுதிபடுத்தியிருந்தனர்.  இந்நிலையில், அஜித் பிறந்தநாளுக்கு விவேகம் டீசர் வெளிவராது என நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளது

இந்நிலையில், விவேகம் படத்தில் அஜித் ஒரு பெரிய மரக்கட்டையை தோளில் வேதனயுடன் சுமந்து வருவது போன்ற ஒரு போஸ்டர். இது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டியுள்ளது. இந்த புகைபடம் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.