Ajith Kumar: அஜித்துக்கு தன்னுடைய ரசிகர்களை பற்றி எந்த கவலையும் இல்லை என அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் நெகட்டிவ் கமெண்ட் வருவதுண்டு.
அதை தாண்டி என்னை தல என்று கூப்பிடாதீங்க, கடவுளே அஜித்தே என்று சொல்லாதீங்க என்று ரசிகர்களுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்தார்.
அது மட்டும் இல்லாமல் தன்னுடைய படத்திற்கான முதல் நாள் கொண்டாட்டம் இருக்கவே கூடாது என்ற முடிவையும் எடுத்தார்.
இதற்கெல்லாம் பின்னால் அஜித் தன்னுடைய ரசிகர்களை ரசிக்கிறார் என்பதை முதன்முறையாக ஒரு பிரபலம் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
கடவுளே, அஜித்தே!
விடாமுயற்சி படத்தில் திரிஷாவின் தோழியாக துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சௌமியா பாரதி. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்திருக்கிறார்.
இவர் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு போன நாளிலிருந்து அஜித் அவருடன் ரொம்பவும் சாதாரணமாக பழகினாராம்.
சவடிக்கா பாடல் படப்பிடிப்பின் போது நடனமாட அஜித் ரொம்பவே பதட்டத்துடன் காணப்பட்டாராம். ஒரு ஸ்டெப் முடித்துவிட்டு ரொம்பவும் சோர்ந்து போய் சௌமியா அருகில் அமர்ந்திருக்கிறார்.
அப்போது கடவுளே என்று சொல்லிவிட்டு ஒரு வினாடி சௌமியாவின் முகத்தை பார்த்துவிட்டு அஜித்தே என்று சொன்னாராம். சொல்லிவிட்டு அவரே சிரித்து சிலாகித்துக் கொண்டதாக சௌமியா பகிர்ந்து இருக்கிறார்.
