Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகர் சங்கத்தின் மவுனப் போராட்டத்தில் பங்கேற்கிறார் அஜித்
ஜனவரி 20ம் தேதி நடைபெறவுள்ள நடிகர் சங்கத்தின் மவுனப் போராட்டத்தில் பங்கேற்க உறுதியளித்துள்ளார் அஜித்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனவரி 20ம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பாக மாபெரும் மெளன அறவழிப் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளார்கள். இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள அறிவுறுத்துவோம் என துணைத் தலைவர் பொன்வண்ணன் தெரிவித்தார்.
நடிகர் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பதற்கும், பொதுக்குழு உள்ளிட்ட எந்தொரு நிகழ்விலும் அஜித் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் நடத்தவுள்ள மவுனப் போராட்டத்தில் அஜித் உறுதியாக பங்கேற்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
