Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித்தால் கைவிடப்பட்ட பிளாக்பஸ்டர் படங்கள்.. என்ன தல இப்படி பண்ணிட்டீங்களே..
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார். தற்போது வரை தல அஜித் 11 படங்களை கைவிட்டு உள்ளார். இந்தபடங்களில் வேறுசில நடிகர்களால் நடிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது.
படங்களின் லிஸ்ட் இதோ :
1997 ஆம் ஆண்டு சாருமதி என்ற படத்தை முதன்முதலாக டிராப் செய்தார். தல, தளபதி இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தைத் தொடர்ந்து மீண்டும் 1999 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற படத்தில் இணைந்தனர். ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகு தல அஜித் அப்படத்திலிருந்து விலகினார்.
2000 ஆம் ஆண்டு அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியான திரைப்படம் நியூ. சில காரணங்களால் இந்த படத்தையும் கைவிட்டார். சேது பட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித்தை வைத்து பாலா, நந்தா என்ற படத்தை தொடங்கினார். இந்த படமும் பாதியில் கைவிடப்பட்டது. பிறகு சூர்யா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
சிட்டிசன் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சரவண சுப்பையா உடன் மீண்டும் இதிகாசம் என்ற படத்தில் இணைந்தார். வரலாற்றுப் பின்னணியில் உருவான இந்த படத்தை தல அஜித் காரணமின்றி கைவிட்டார். அஜித்தின் ஃபேவரைட் இயக்குனர் சரண், மூன்றாவது முறையாக தல அஜித்தை வைத்து ஏறுமுகம் என்ற படத்தை தொடங்கினார். கதையில் திருப்தி இல்லாத காரணத்தினால் தல அஜீத் அந்த படத்தை கைவிட பிறகு விக்ரம் நடிப்பில் ஜெமினி என்ற பெயரில் வெளிவந்த ஹிட்டடித்தது.
போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த மகா என்ற படம் 2002 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. பிறகு மருத்துவர் வேடத்தில் நடித்த திருடா படம் பாதியில் கைவிடப்பட்டது. பிறகு இதே கூட்டணி ஜனா படத்தில் ஒன்று சேர்ந்தது. வரலாறு பட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் மீண்டும் இணைந்த காங்கேயன் என்ற படம் பாதியில் கைவிடப்பட்டது.
மீண்டும் பாலாவுடன் நான் கடவுள் படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்த தல அஜித், பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கைவிட்டார். பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மிரட்டல் என்ற படத்தில் மொட்டை அடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக படத்திலிருந்து விலகினார். பிறகு சூர்யா நடிப்பில் கஜினி ஆக வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது.
