fbpx
Connect with us

பதற்றத்தில் நடிகர் அஜித் செய்த பெரிய தவறு! அவரை மிஞ்சிய நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ajith_cinemapettai

பதற்றத்தில் நடிகர் அஜித் செய்த பெரிய தவறு! அவரை மிஞ்சிய நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் அஜித் 1993ம் ஆண்டு வெளியான அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகர் அஜித்துடன் பல நடிகைகள் நடித்து இருந்தாலும் கூட அவரை குறித்து இன்று வரை யாரும் தவறாக பேசியது கிடையாது.

கடந்த1999ம் ஆண்டு வெளியான ஆனந்த பூங்காற்றே படத்திற்காக புதுமுக நடிகருக்கான விருது நடிகர் அஜித்துக்கு நடிகை மீனா வழங்கினார். அப்போது நடைபெற்ற விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் அஜித்துடன் மீனா நடனம் ஆட கோரிக்கை விடுத்தார். அப்போது நடிகை மீனா அம்மா சொன்னது இது தான். ” என் மகள் ரஜினி, கமலுடன் நடித்தவள், உன்னுடன் நடனம் ஆடினால் பொருத்தமாக இருக்காது” என கூறி மீனாவை அழைத்து சென்றார்.

இது நடந்தும் கூட, அஜித் பெருந்தன்மையுடன்மீனாவை மன்னித்து தனது படத்தில் நடிக்க மீனாவிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். அமர்க்களம்’ படத்தில் நடிக்கும் போது அஜித் தன் மனதில் உள்ள காதலை ஷாலினியிடம் தெரிவித்தார்.

எங்கள் வீட்டில் பேசிக்கொள்ளுங்கள் என ஷாலினி அப்போது தெரிவித்துள்ளார். காதலை கூறியதும் நடிகர் அஜித் ஒரு வித படபடப்புடன் இருக்கும் சமயத்தில், அடுத்த பத்தாவது நிமிடத்தில் நம்ம தல ஷாலினியின் கையை கத்தியால் அறுக்கும் காட்சி எடுக்கப்பட்டது.

முன்னதாக பதட்டத்துடன் இருந்த அஜித் கொஞ்சம் அழுத்தமாக ஷாலினி கையில் கத்தியை வைக்க, நிஜமாகவே ஷாலினியின் கையில் பெரிய காயம் ஏற்பட்டது. இதனை ஷாலினி பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாம், ஆனால் அஜித் இதனை கண்டு பதறி விட்டாராம்.

தல தவறு செய்தால் பெருந்தன்மையுடன் மன்னிப்பவர், ஆனால் அவரது மனைவி ஷாலினி அதுக்கு ஒரு படி மேலே சென்று அவரை அன்பால் தன்வசமாக்கியுள்ளார் இந்த தகவலை தற்போது அமர்க்களம் பட இயக்குனர் சரண் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top