Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித், சூர்யா மறுத்த படம்.. சின்ன நடிகர் நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் எது தெரியுமா?
தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் தல அஜித் மற்றும் நடிகர் சூர்யா. இவர்கள் இருவருக்குமே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்கள் இருவரும் நடிக்க மறுத்த கதையில் இளம் ஹீரோ ஒருவர் நடித்து படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த செய்தி தற்போது பரவ ஆரம்பித்துள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஆனந்தம். இந்த படத்தில் மம்முட்டி, முரளி, தேவயானி, ரம்பா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும்.
இன்றும் குடும்ப ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படமாக உள்ளது. இந்த படத்தில் சாக்லேட் பாய் அப்பாஸ் கேரக்டருக்காக முதன் முதலில் பேசப்பட்டவர் தல அஜித் தான். அன்றைய காலகட்டங்களில் அஜித் ஒரு காதல் நாயகனாக வலம் வந்தார்.
ஆனால் அவர் மறுக்கவே பிறகு இதே கதாபாத்திரம் நடிகர் சூர்யாவிடம் சென்றது. அவருக்கும் மூன்றாவது ஹீரோ போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஈடுபாடு இல்லை. இறுதியாக தான் அப்பாஸ் இந்த கதாபாத்திரத்திற்காக பேசப்பட்டார்.

aanandham
படம் வெளியான பிறகு அப்பாஸ் கேரக்டரும் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆனந்தம் படத்திலிருந்து சினேகா முதன் முதலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் என்பது அதிகம் அறிந்திராத உண்மை.
