Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி விஜய்க்கு உறவினர் ஆகும் அதர்வா.. அட! எப்படி தெரியுமா?
பிரபல முன்னாள் நடிகர் முரளியின் மகனும், நடிகருமான அதர்வா கூடிய விரைவில் விஜய்க்கு உறவினராக போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நடிகர் முரளி சினிமாவுக்கு நிறம் தேவையில்லை என்பதை உணர்த்தியவர். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரின் வழியே வந்த மூத்த மகன் அதர்வாவும் தற்போது சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகராக வளர்ந்துள்ளார். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம்.
இவருக்கு காவியா மற்றும் ஆகாஷ் என்ற உடன்பிறந்தவர்கள் உள்ளனர். இதில் ஆகாஷ் என்பவர் தளபதி விஜய்யின் உறவுக்கார பெண்ணை காதலித்து வருகிறார். இதில் ஆகாஷ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் காதலிக்கும் பெண் கிறிஸ்டியன் மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இரு குடும்பங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
பிறகு இரு குடும்பங்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் விரைவில் அதர்வா வீட்டில் டும்டும் சத்தம் கேட்கும் என நம்பலாம்.இதனால் நடிகர் விஜய் மற்றும் அதர்வா இனிவரும் காலங்களில் உறவினர்களாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
