கோடி கொடுத்தாலும் விலைபோகாத கார்த்தி.. தில்லாக எடுத்த துணிச்சல் முடிவு!

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி. இவருடைய முதல் படமான பருத்திவீரன் படத்தில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதை ஈசியாக கவர்ந்து விட்டார்.

அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல, பையா, பிரியாணி, கொம்பன், சுல்தான், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி போன்ற பல வெற்றிப் படங்களை நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொம்பன் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படம் திரைக்கு வர காத்திருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

நல்ல கதை அம்சங்களைக் கொண்ட படங்களைத் தேடி தேடி நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி, கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் தான் நடிக்கும் படங்களில் புகைபிடிக்கும் படி காட்டப்படும் காட்சிகளில் நடிக்க மாட்டேன். பெரும்பாலும் புகைப்பிடிக்கும் காட்சிகளை நடிக்க தவிர்த்து வருகிறேன் என தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதியளித்துள்ளார்.

தங்களுக்குப் பிடித்தமான நடிகர்கள் புகைப்பிடிப்பதை ஸ்டைலாக காட்டுவதால் அதை அப்படியே வளரும் தலைமுறை பார்த்து கெட்டுப்போவதற்கு வாய்ப்பாக அமைகிறது. அதன் காரணமாகவே கார்த்தி புகைபிடிப்பதை படத்தில் கூட காட்ட வேண்டாம் என வலியுறுத்துகிறார்.

இவர் மட்டுமல்ல நடிகர் சூர்யாவும் மற்ற நடிகர்களை காட்டிலும் விவசாயம் உள்ளிட்ட விஷயங்களை தன்னுடைய படங்களில் முக்கியத்துவம் கொடுத்து கொஞ்சம் வித்தியாசமாகவும் சமூக அக்கறையுடனும் ஒரு சில செயல்பாடுகளில் ஈடுபடுகின்றார். எனவே சிவகுமாரின் இரண்டு மகன்களும் அவரைப்போன்றே இருப்பதாக கோலிவுட்டில் பெருமிதம் கொள்கின்றனர்.

Next Story

- Advertisement -