நடிகர் அப்பாஸ் கொல்கத்தாவில் 1975 ம் ஆண்டு பிறந்தவர், இவரின் முழு பெயர் மிர்ஸா அப்பாஸ் அலி, இவரின் குடும்பம் பாலிவுட் நடிகர் பேரோஸ் கானுக்கு சொந்தமாகும்.

இவர் சிறு வயதில் இருந்தே ஹிந்தி மாற்றும் பெங்காலி படங்களை பார்த்து பார்த்து வளர்ந்துள்ளார், அதனால் தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார் அப்பாஸ், அந்த சமையத்தில் தமிழ் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்துள்ளார்.

abbas

அந்த சமையத்தில் அவரது நண்பர் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் அப்பாஸ், இவர் முதன் முதலில் 1996 ல் காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார், ஆனால் இந்த முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ் அதன் பின் அனைவராலும் மிகப்பெரிய நடிகராக பார்க்கபட்டார்.

abbas

இவரை அஜித் விஜய்க்கு போட்டியாக வருவார் என பலர் கூறிவந்தார்கள் அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ,மலையாளம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படத்தில் நடித்திருப்பார்.

இவரி நடித்த தமிழ் படங்கள் படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், ஹே ராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மின்னலே,  காதல் வைரஸ், அடிதடி, ஆனந்தம் என பல படத்தில் நடித்துள்ளார்.

இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது.தற்போது அப்பாஸ் டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.