அப்பாவுக்கு அரசியல் பண்ணத் தெரியவில்லை என்று விமர்சனங்கள் எழும் நிலையில் அவரது வாரிசு அரசியலை வைத்தே தனது படத்தை ஓட்டுகிறார் என்கிறார்கள்.

கடந்த வெள்ளியன்று வெளியான அரசியல் வாரிசின் படம் வெகுஜன மக்களை வெகுவாக ஏமாற்றியது. ஆனால் பெரும்பாலான ஊர்களில் தியேட்டர்களில் கணிசமான கூட்டம் இருக்கிறது.

எப்படி என்று விசாரித்தால் வாரிசின் பலே ஐடியா தெரிய வருகிறது. தியேட்டர்களை நிரப்ப வேண்டும் என்பது இளைஞரணிக்கு வாய்வழி உத்தரவாம். படம் பார்த்தவர்களை லிஸ்ட் எடுத்து கட்சித் தலைமைக்கு அனுப்ப சொல்லியிருக்கிறார்கள்.

 

பார்த்து பாஸ்… இந்த மாதிரி இன்னொரு படம் நடிச்சீங்கன்னா கட்சில இளைஞரணியே இல்லாமப் போயிடப் போகுது!