Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay65

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்பா செய்த வில்லத்தனத்தால் திடீர் முடிவெடுத்த தளபதி விஜய்.. புதுப்பொலிவுடன் மக்கள் இயக்கம்!

தமிழ் சினிமாவில் ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்திற்கு சொந்தக்காரராக விளங்குபவர் தான் தளபதி விஜய். 

எனவே விஜய் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அண்மையில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். ஆனால் இந்தக் கட்சியில் யாரும் இணைய வேண்டாம் என்று  தளபதி விஜய் அவருடைய ரசிகர்களை கேட்டுக்  கொண்டார். 

அதன்பின் எஸ்ஏ சந்திரசேகர்-விஜய் உறவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தளபதி விஜய் தனது மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை அதிரடியாக நியமித்துள்ளார். 

மேலும் தனது ‘அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு’ ஒரு சில  கட்டுப்பாடுகள் அடங்கிய அறிக்கை ஒன்றை தளபதி விஜய் வெளியிட்டுள்ளார். 

அதில் விஜய்யின் போட்டோ, இயக்கத்தின் பெயர், கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் அனுமதியைப் பெற்றே பயன்படுத்தவேண்டும். 

மேலும் இதை மீறினால் இயக்கத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு தனது அப்பா செய்த வில்லத்தனத்தால், மக்கள் இயக்கத்தை புதுப்பொலிவுடன் மாற்றி அமைத்துள்ள தளபதி விஜய்க்கு அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top