கோபி எடுத்த அதிரடி முடிவு, அவசரமாக முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி.. மகாநதி சீரியலில் ஏற்பட்ட குளறுபடி

Vijay tv Serials: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு மேல் ஓடிக்கொண்டிருப்பது பாக்கியலட்சுமி சீரியல். ஆரம்பத்தில் குடும்பங்கள் கொண்டாடும் கதையாக இருந்தாலும் போகப்போக கதை எதுவும் இல்லாமல் மட்டமாக உருட்டிக் கொண்டு வருகிறார்கள். அதிலும் கோபி நடிப்பு தூக்கலாக இருந்தாலும் நிறைய நெகட்டிவ் விஷயங்கள் இருப்பதால் அனைவரும் வெறுத்து விட்டார்கள்.

அந்த வகையில் இந்த நாடகத்திற்கு ஒரு முடிவே இல்லையா என்பதற்கு ஏற்ப அரச்ச மாவையே அரைத்துக் கொண்டு வருகிறார்கள். இதில் தற்போது கோபியின் கதாபாத்திரம் நெகட்டிவ் ஆக மாறிவிட்டது. பிள்ளைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு பாக்யாவுக்கு எதிராக பல சதிகளை செய்ய ஆரம்பித்து விடுகிறார். இந்த சூழ்நிலையில் தற்போது கோபி கொடுத்த ஒரு பேட்டியில் இனிவரும் சில காட்சிகளில் என்னை மொத்தமாக ஒதுக்கி விடுவீர்கள்.

கோபமாக கோபி கொடுத்த பேட்டி

அதன் பிறகு நான் பர்தா போட்டுக் கொண்டுதான் ரோட்டில் அலையனும். ஏனென்றால் அந்த அளவிற்கு எல்லோரும் என்னை திட்ட ஆரம்பித்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு மோசமான கோபியாக கதை மாறப்போகிறது என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த நடிப்பு தொழிலை விட்டு வண்டி ஓட்டலாம் அல்லது சாப்பாடு டெலிவரி பண்ணலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.

அப்படி ஒருவேளை நான் சாப்பாடு டெலிவரி வேலையே பார்த்தா கூட என்னை யாரும் எதுவும் பண்ணிடாதீங்க. ஏனென்றால் அந்த அளவிற்கு என்னுடைய நடிப்பு பலரையும் காயப்படுத்தப் போகிறது. இந்த காட்சிகள் எனக்கே நடிப்பதற்கு பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழி இல்லை, அதனால் சீரியலை விட்டு விலகிக் கொள்கிறேன் என்று கோபி கூறி இருக்கிறார்.

ஆனால் இந்த சமயத்தில் கோபி கேரக்டரை மாற்றினால் நல்லா இருக்காது என்பதற்காக கடைசியாக இந்த காட்சிகளை வைத்து பாக்கியலட்சுமி சீரியலை முடித்து விடலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள். அதனால் இன்னும் ஒரு சில தினங்களில் பாக்கியலட்சுமி சீரியலை அவசர அவசரமாக முடிக்கப் போகிறார்கள். அத்துடன் தற்போது மக்களின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்து வருகிறது மகாநதி சீரியல்.

அதனால் இந்த சீரியலில் நேரத்தை மாற்றலாம் என்ற முடிவில் பாக்கியலட்சுமி சீரியலை முடித்துவிட்டு இரவு 8.30 மணிக்கு பிரேம் டைமில் ஒளிபரப்பாக போகிறார்கள். ஏற்கனவே பிக் பாஸ் வருவதால் எந்த சீரியலை மாற்றலாம் எந்த சீரியலை முடிக்கலாம் என்ற மனநிலையில் இருந்த விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலை க்ளோஸ் பண்ணப் போகிறார்கள். மேலும் மகாநதி சீரியலை எப்பொழுது போடலாம் என்ற குளறுபடியில் இருந்து தற்போது ஒரு தீர்வு கிடைத்துவிட்டது.

- Advertisement -spot_img

Trending News