அர்ஜூன் ஒரு புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார்.

அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு “ஆக்சன் கிங்” எனும் பட்டம் ரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.

arjun

நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் 90 களில் தனக்குன்னு ஒரு பெரிய மார்கெட் வைத்திருந்தவர்  இவர் தற்பொழுது கடல் மங்கத்தா என சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார்.

arjun

மேலும் இரும்புத்திரை படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் இவர் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் படம் சொல்லிவிடவா இந்த படம் திரைக்கு வர இருக்கிறது  படத்தில் அர்ஜுன் மகள் தான் நடித்துள்ளார்.

arjun

படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் பிஸியாக நடந்து வருகிறது இந்த சமையத்தில் அர்ஜுனிடம் அவரின் சிறுவயது புகைப்படத்தை காண்பித்துள்ளார்கள் ஒரு நிகழ்ச்சியில்.

அவர் ஒரு சில நொடி புகைப்படத்தை உற்று பார்த்து நானா இது !என்று ஆச்சரியத்துடன் பார்த்துள்ளார் அப்போதே அர்ஜுன் 6 பேக்ஸ் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.