வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய், அஜித் படங்களில் மாஸ் காட்டியாச்சு, அடுத்த லெவலுக்கு தயாரான ஆக்சன் கிங்.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்

விஜய்யுடன் லியோ படத்திற்குப் பின், ஆக்சன் கிங் அர்ஜூன் தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் அர்ஜூன் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆக்சன் கிங் அர்ஜூன் இயக்கும் புதிய படம்

சினிமாவில் தனக்கென தனி ஆக்சன் ஸ்டைல், நடிப்பு, வசன உச்சரிப்பு மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் அர்ஜூன். 90 களில் இவர் நடித்த படங்கள் கொண்டாடப்பட்டன. 1992 ஆம் ஆண்டு சேவகன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறியப்பட்ட அவர், இதுவரை பிரதாப், வேதம், ஜெய்ஹிந்த், தவம் உள்ளிட்ட 12 படங்களை இயக்கியுள்ளார்.

நடிகராக இருந்து இயக்குனராக மாறி வெற்றி பெற்றவர்களில் அர்ஜூனும் ஒருவர். எனவே அவரது ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், அர்ஜூன் தனது 13 வது படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர் நேசனல் தயாரிப்பில் அப்படம் உருவாகவுள்ளது. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே தேசபக்தி படங்கள், போலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான அவர் பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். அந்த வரிசையில் அவர் இயக்கும் அடுத்த படமும் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அர்ஜூன் நடிக்கும் படங்களுக்கு ஆக்சனில் அதிக முக்கியத்துவம் இருக்கும். அதைவிட அவர் இயக்கும் படங்களுக்கும் அதிரடி சண்டை காட்சிகளில் கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என்பதால் இப்படத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் அர்ஜூன் ரசிகர்களுக்கு கொடுக்க விருப்பதாக தகவல் வெளியாகிறது.

அர்ஜூனே இப்படத்தில் நடிக்கிறாரா.! அல்லது வேறு புதுமுகங்கள் நடிக்கிறார்களா அடுத்து வெளியாகவுள்ள ஃபஸ்ட்லுக் போஸ்டரில் விவரங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் துருவ் சர்ஜா நடிப்பில் வெளியான மார்டின் படத்திலும் அர்ஜூன் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அர்ஜூன் தன் அடுத்த கட்ட வேலைகளில் இறங்கி, இப்படம் மூலம் மீண்டும் பிரேக் கொடுக்கவிருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏக போக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவரது இயக்கம் தற்போதைய இயக்குனர்களுக்கு இணையாக, இக்காலகட்டத்தில் அவருக்கு கைகொடுக்குமா? என கேள்வியும் எழுந்து வருகிறது.

வரிசை கட்டி நிற்கும் படங்கள்

அதேபோல், தீயவன் குலைகள் நடுங்க, அகத்தியா, விருந்து உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக சர்வைவல் சீரீஸ் தொடரையும் பிரமாண்டமான முறையில் அவர் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அர்ஜூனின் சம கால நடிகர்கள் ஆக்டிவாகவும் ஹீரோ வேடம் கிடைக்கவில்லை என்றாலும் சாமர்த்தியமாக அர்ஜூன் மட்டும் மங்காத்தா படத்தில் இருந்து, விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் படங்களில் கிடைக்கும் துணை கேரக்டரில் நடித்து, வில்லனாகவும் அசத்தி, அதிலிருந்து தன் திறமையை நிரூபித்து மீண்டும் இயக்குனராகவும் ஹீரோவாகவும் கால் பதிக்கவுள்ளதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Trending News