வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சொந்தப்படம் எடுத்து சொத்தை இழந்த சர்வைவர் தல.. வெறி ஏத்திவிட்டு வெற்றி பெற வைத்த அர்ஜுன்

விஜய் டிவியில் பிக்பாஸ் போல ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்போட்டியில் காடர்கள், வேடர்கள் என இரு தீவுகளில் பழங்குடி அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தி வருகின்றன. இதில் ஆக்சன் கிங் அர்ஜுன் இப்போட்டிகளை வழி நடத்துகிறார்.

அர்ஜுன் உடற்பயிற்சி மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். சமூகம் சார்ந்த படங்கள் மற்றும் ஆக்சன் காட்சிகளில் நடிப்பதால் இவருக்கு ஆக்சன் கிங் அர்ஜுன் என பெயர் நிலைத்துப் போனது. தற்போதும் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார்.

நேற்று போட்டி களத்துக்கு வந்த சர்வைவர்ஸ் காடர்களில் இருந்து முதலில் ராம் வரவில்லை. பூச்சிக்கடி பிரச்சினையால் தான் சிகிச்சை பெற்ற திரும்பவும் காட்டிற்கு வந்தார். அதே பிரச்சினை லேடி காஷ்க்கும் இருந்தது. கடந்த சவாலில் வேடர்கள் அணியில் அம்ஜத் காலில் அடிபட்டு இருந்தது.

இதனால் 90-களில் முன்னணி கதாநாயகனாக இருந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது சொந்த கதையை சொல்லி ஊக்கப்படுத்தினார். ஆரம்ப கட்டத்தில் எனது அனைத்து திரைப்படங்களும் தோல்வியைத் தழுவியது. பிறகு மனைவி, அம்மா சொத்துக்களை விற்று படம் தயாரிக்க தொடங்கினேன்.

கடைசி கட்டத்தில் நிதி சிக்கல் ஏற்பட்டது. படப்பிடிப்பில் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஆனால் திடீரென்று எங்கிருந்தோ உத்வேகம் வந்து கேமராவை நானே வாங்கி படப்பிடிப்பு மேற்கொண்டேன். கடைசியில் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

survivor-arjun
survivor-arjun

வெற்றி என்பது ஒரு நாளில் கிடைத்து விடாது தொடர்ந்து முயன்றால் தான் கிடைக்கும் என போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினார். நேற்று அந்தப் போட்டியில் காடர்கள் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

Trending News