சினிமாத்துறை அதிரடி, விழி பிதுங்கும் ப்ளூ சட்டை மாறன்.. பிழைப்பை கெடுக்கும் விமர்சனங்களால் வந்த வினை

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளிவந்தால் 200, 300 நாட்களை தாண்டி கூட ஓடும். சில திரைப்படங்கள் வருட கணக்கில் ஓடி சாதனை படைத்ததும் உண்டு. ஆனால் இந்த காலகட்டத்தில் ஒரு திரைப்படம் ஒரு வாரம் தாண்டி தியேட்டர்களில் ஓடுவதே பெரும் பாடாக இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படம் குறித்து வெளிவரும் விமர்சனங்கள் தான். சில காலங்களுக்கு முன்பு வரை பெரிய பத்திரிகைகள் தான் ஒரு திரைப்படத்தின் தரம் என்ன என்பதை நன்றாக அலசி ஆராய்ந்து விமர்சனம் கொடுப்பார்கள். ஆனால் சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் விமர்சகர் என்ற பெயரில் பலரும் திரைப்படங்களைப் பற்றி விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

Also read: சிம்புவை வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்.. உருவ கேலிக்கு இப்படி ஒரு பதிலடியா?

அதிலும் ப்ளூ சட்டை மாறன் போன்ற விமர்சகர்கள் கொஞ்சம் கூட நியாயமே இல்லாமல் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதுவே நன்றாக ஓட வேண்டிய சில திரைப்படங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. எப்படி என்றால் சிலர் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு ஒரு மாதிரியும், பிடிக்காதவர்களுக்கு ஒரு மாதிரியும் படங்களை விமர்சனம் செய்கின்றனர்.

அதனால் நன்றாக இருக்கும் திரைப்படங்கள் கூட இது போன்ற விமர்சனங்களால் தோல்வியை பெறுகிறது. இதற்காகத்தான் தற்போது சினிமா துறை அதிரடியான ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து பல நிபந்தனைகள் போடப்பட்டிருக்கிறது.

விரைவில் அவை அனைத்தும் நடைமுறைக்கும் வர இருக்கிறது. அந்த வகையில் ஒரு படம் வெளியான மூன்று நாட்கள் கழித்து தான் யாராக இருந்தாலும் விமர்சனம் செய்ய வேண்டும். அதற்கு முன்பு யாரும் விமர்சனம் செய்யக்கூடாது. அதேபோன்று மைக் மற்றும் கேமராவுடன் தியேட்டர் வாசலில் யாரும் நிற்க கூடாது.

Also read: வாரிசு படத்தையும் விட்டுவைக்காத ப்ளூ சட்டை.. 15 லட்சம் கொடுத்தும் அட்டை காப்பி அடிப்பீங்களா!

அது மட்டுமல்லாமல் விஐபிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு விஷயத்தையும் கசிய விடக்கூடாது என்பது போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. இது விமர்சனம் என்ற பெயரில் மோசமான கமெண்ட்டுகளை கொடுக்கும் சினிமா விமர்சகர்களுக்கு ஒரு சாட்டையடியாக இருக்கிறது.

இனிமேல் தரம் இல்லாத விமர்சனங்களும், படம் வெளிவந்த பிறகு அதை ட்ரோல் செய்வதும் குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற நிபந்தனைகளை ரசிகர்களும் வரவேற்கின்றனர். தற்போது சினிமா துறையின் இந்த அதிரடியால் ப்ளூ சட்டை மாறன் போன்றவர்கள் விழி பிதுங்கி இருக்கின்றனர்.

Also read: ப்ளூ சட்டை மாறனை புரட்டி எடுத்தாங்களா அஜித் ரசிகர்கள்.? பின்னணியில் உள்ள காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்