பிரபலங்களில் பயோபிக் எடுப்பது ஹாலிவுட்டைப் போலவே இந்திய சினிமாவிலும் தற்போது ட்ரெண்ட் அடித்து வருகிறது. விளையாட்டு வீரர்களான சச்சின், தோனி, மேரி கோம் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களை அடுத்து திரைத்துறை பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் படமாகி வருகிறது. சஞ்சய் தத்தின் பயோபிக்கில் ரன்பீர் கபூர் நடித்து வருகிறார். நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான அந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தநிலையில், தமன்னாவுக்கும் பயோபிக்கில் நடிக்க ஆசை வந்திருக்கிறது.

sridevi

பாகுபலி முதல் பாகத்தில் அவந்திகா கேரக்டரில் அசரடித்த தமன்னாவுக்கு, இரண்டாம் பாகத்தில் பெரிய ஸ்பேஸ் கிடைக்கவில்லை. இதனால், வரலாற்று கதாபாத்திரங்களில் நடிப்பதில் தமன்னா ஆர்வம் காட்டி வருகிறார். சிரஞ்சீவி நடித்துவரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் தமன்னா ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான அதில், அமிதாப் பச்சனும் கேமியோ பண்ணுகிறார். அதேபோல், விஜய் சேதுபதிக்கும் படத்தில் வெயிட்டான ரோல் இருக்கிறது.

thamanna

இந்தநிலையி, பயோபிக் படங்கள் மீது தமன்னாவின் ஆர்வம் திரும்பியிருக்கிறது. குறிப்பாக நடிகையர் திலகம் படத்துக்குப் பின்னர் தமன்னா, தனது நடிப்புக்குத் தீனி போடும் கேரக்டர்களைக் குறிவைக்கத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறிய தமன்னா, வரும் காலங்களில் அழுத்தமான கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறேன். நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோருடன் நடிப்பதில் மகிழ்ச்சிதான். அதேநேரம் எனது நடிப்புக்குத் தீனி போடும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். குறிப்பாக நடிகை ஸ்ரீதேவி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரின் கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்’ என்று ஓபனாகவே தமன்னா ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார்.