புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்த நமிதாவின் வைரல் புகைப்படம்.. நிறைவேறிய பல வருட கனவு

திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நடிகை நமீதா, தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். அதிலும் நமீதாவின் கவர்ச்சி மற்றும் கொஞ்சல் பேச்சுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

‘மச்சான்ஸ் மறந்துடாதீங்க!’ என்பது இவருடைய பேமஸ் டயலாக். இருப்பினும் தன்னுடைய ரசிகர்கள் எல்லோரையும் ஏங்கித் தவிக்க விட்டுவிட்டு, கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செட்டில் ஆகிவிட்டார்.

Also Read: ஆராரோ ஆரிரரோ பாட்டு பாடிய நமீதா!

திருமணத்துக்குப் பிறகு ஒருசில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்ட நமீதாவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு 5 வருடங்கள் கழித்து தனது பிறந்தநாளன்று கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்தார்.

நமீதாவின் கர்ப்பகால போட்டோஷூட்

namitha
actress-namitha-cinemapettai

அந்த சமயம் அவரது கர்ப்பகால போட்டோஷூட் இணையத்தில் வைரலாகப் பரவியது. இந்நிலையில் நடிகை நமீதாவிற்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

Also Read: 17 வயதில் நமீதா எடுத்த போட்டோ ஷூட்!

இரட்டை ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நமீதா

namitha-cinemapettai
namitha-cinemapettai

இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்படுகிறது. இதைப் பார்த்த அவருடைய ரசிகர்களும் பிரபலங்களும் நமீதாவிற்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: மன உளைச்சலில் தற்கொலை வரை சென்ற நமீதா!

- Advertisement -spot_img

Trending News