2 முறை பல்டி அடித்த கார், விபத்தில் சிக்கிய அஜித்.. என்ன நடந்தது ஸ்பெயினில்

Ajith
Ajith

Ajith Kumar: நடிகர் அஜித்குமார் கார் விபத்தில் சிக்கியதுதான் நேற்று இரவில் இருந்து பெரிய அளவில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

அஜித் குமார் கிளப் ரேஸிங் அணி துபாய் நாட்டு கார் பந்தயத்தில் பங்கேற்று பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நடக்கும் பந்தயத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் தகுதி சுற்றின் போது தான் இந்த விபத்து நடந்து இருக்கிறது. இந்த விபத்து குறித்து பலரும் பல நெகட்டிவான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

விபத்தில் சிக்கிய அஜித்

ஆனால் அதில் எந்தவித உண்மையும் கிடையாது. அஜித்குமார் ஓட்டி வந்த காருக்கு முன்னாடி இன்னொரு கார் சென்று கொண்டிருக்கிறது.

திடீரென அந்தக் கார் திரும்ப முயற்சிக்க அஜித்குமாரின் கார் அதன் மீது இடிக்கிறது. இதனால் கிட்டத்தட்ட இரண்டு, மூன்று முறை அஜித்தின் கார் பல்டி அடிக்கிறது.

அந்த இடத்திற்கு உடனே பாதுகாப்பாளர்களும், ஆம்புலன்ஸும் விரைந்து செல்கிறது. காரிலிருந்து அஜித்குமார் நலமாகவே வெளியில் வருகிறார்.

அவரை பாதுகாப்பாக அவர்கள் அழைத்து செல்கிறார்கள். இதைத் தாண்டி அஜித்குமாருக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.

Advertisement Amazon Prime Banner