Tamil Cinema News | சினிமா செய்திகள்
டாக்டர் வேல்முருகன் வாழ்க்கையில் படைத்த மிக பெரிய சாதனைகள்.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய பல உண்மைகள்!
தமிழ் சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி பாடகராக உயர்ந்து நிற்பவர் தான் கிராமிய பாடகர் வேல்முருகன்.
இவர் 2008 ஆம் ஆண்டு சசிகுமாரின் ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் “மதுர குலுங்க..” என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.
அதன் பின் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4-ல் ஒரு போட்டியாளராக களமிறங்கி, சென்ற வாரம் அவர் எலிமினேட் செய்தபோது கமலிடம் வெளிப்படையாக அவருடைய சாதனைகளை பதிவிட்டது ரசிகர்களை வியக்க வைத்தது.
ஏனென்றால் சாதாரண குடும்பத்தில் பிறந்த சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்பட்டு வேல்முருகன், தற்போது டாக்டர் பட்டம் பெற்றது மட்டுமில்லாமல் பல விருதுகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.
மேலும் இவருடைய கடின உழைப்பால், தற்போது BMW கார் மட்டுமல்லாமல், ஈசிஆரில் வீடு என உச்ச பிரபலங்களுக்கு நிகராக வளர்ந்து நிற்கிறார்.
எனவே வேல்முருகனின் வியப்பூட்டும் சாதனைகள் என்னவெனில்,
- 2007 – அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கப்பட்ட முனைவர் விருது.
- 2009 – ஆடுங்கடா.. பாடலுக்காக சிறந்த அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணி பாடகருக்கான எடிசன் விருது.
- 2010 – ஜனாதிபதி ஏ.பி.ஜே, அப்துல் கலாம் அவர்களால் வழங்கப்பட்ட நாட்டுப்புற நாயகன் விருது.
- 2014 – சிறந்த பிளே பேக் பாடகர் விருது.
- 2017 – மராபு இசாய் நாயகன் விருது.
- 2019 – ரேடியோ மிர்ச்சி விருது.
- 2019 – கலைமணி விருது.
- 2019 – நாட்டி தமிழ் கலை ஒயிலாட்டதிற்காக உலக கின்னஸ் சாதனை.
- 2020 – பெரியார் விருதுகள்.
எனவே இவருடைய வியப்பூட்டும் சாதனைகளை தற்போது அவருடைய ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
