Connect with us
Cinemapettai

Cinemapettai

yogibabu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யோகி பாபு மட்டுமே செய்த சாதனை.. கவுண்டமணிக்கு கிடைக்காத அந்த வாய்ப்பு

தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடியன் யார் என்று கேட்டால் அது நிச்சயம் யோகி பாபுவாகத்தான் இருக்க முடியும். சமீபகாலமாக வெளிவரும் திரைப்படங்களில் எல்லாம் இவர் நிச்சயம் இருப்பார். அந்த அளவுக்கு கைவசம் ஏராளமான படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

ஒரு காமெடியனாக மட்டுமல்லாமல் இவர் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் எந்த ஒரு காமெடியனும் செய்யாத ஒரு சாதனையையும் கைவசம் வைத்திருக்கிறார். ஒரு காலத்தில் காமெடியில் கொடிகட்டி பறந்த சந்தானம் இப்பொழுது அந்த மாதிரி வேடங்களில் நடிப்பது கிடையாது.

அவர் முழு நேர ஹீரோவாக சினிமாவில் களமிறங்கி விட்டார். இதனால் சினிமாவில் காமெடி செய்வதற்கு யோகி பாபுவை விட்டால் வேறு யாரும் கிடையாது என்னும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அவரும் அதை அப்படியே பிடித்துக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி விட்டார்.

இவரின் காமெடியை ரசிக்காத ஆட்களே கிடையாது. அப்படி ரசித்த பிரபலங்களில் ஒருவர் தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவருடைய காமெடியில் கவரப்பட்ட அவர் யோகிபாபுவுக்கு தன்னுடைய படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட யோகி பாபு இணைந்து நடித்திருக்கிறார். இந்த சாதனையை தமிழ் சினிமாவில் இருக்கும் எந்த ஒரு காமெடி நடிகர்களும் செய்தது கிடையாது. சொல்லப்போனால் தமிழ் சினிமா துறையை ஒரு காலத்தில் ஆண்டுவந்த கவுண்டமணி கூட இதை செய்தது கிடையாது.

இப்படி பெரிய புகழை பெற்றிருக்கும் யோகி பாபு ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்தார். அதனால் அவர் இன்றும் கூட அதை மறக்காமல் எளிமையை கடைபிடித்து வருகிறார்.

Continue Reading
To Top