கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வெள்ளியன்று வெளியானது. விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி, ஏ.ஆர்.ரகுமான் இசை என இப்படத்துக்கு பல வகைகளில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

வசூலும் தமிழகம் முழுவதும் சிறப்பாகவே வந்துள்ளது. முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளதாம். இது சிம்பு கேரியரில் மிகப்பெரிய சாதனையாகும்.