சென்னை வள்ளுவர்கோட்டம் , கோடம்பாக்கம் சாலையில் எண்ணெய்போன்ற படலத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில் எண்ணெய் போன்ற படலம் காணப்படுகிறது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் , ஓட்டேரி, சாலி கிராமம், சைதாப் பேட்டை போன்ற இடங்களிலுள்ள சாலைகளில் எண்ணெய் போன்ற படலம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

அதிகம் படித்தவை:  காலா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு...

குறிப்பாக சென்னை வள்ளுவர்கோட்டம் – கோடம்பாக்கம் சாலையில் எண்ணெய்போன்ற படலத்தால் வாகனஓட்டிகள் வழுக்கிவிழுந்து காயம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே வள்ளுவர் கோட்டம் பகுதியில் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு போலீஸ் அறிவுரை கூறிவருகின்றனர். மேலும் சாலைகளில் வழுக்காமல் இருப்பதற்க்காக எண்ணெய் படலத்தின் மீது மணல் தூவும் பணியில் பொதுமக்களும் , போலீசாரும் ஈடுப்பட்டு வ்ருகின்றனர்.

அதிகம் படித்தவை:  உரு மிரட்டும் ட்ரைலர் இதோ

சென்னை சாலைகளில் ஏற்பட்ட எண்ணெய் படலத்தால் 20 மேற்பட்ட வாகன ஓட்டிகள் சாலையில் வழுக்கி விழுந்து சிறு காயங்களுடம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.