fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்யின் பிகில் பட ஷூட்டிங்கில் காயமடைந்தவர் சாவு

bigil-movie-father-name

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் பிகில் பட ஷூட்டிங்கில் காயமடைந்தவர் சாவு

சென்னை பூந்தமல்லி அருகே நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்திற்காக அமைக்கப்பட்ட செட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடிகர் விஜயின் பிகில் படம் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு ஏரளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் செல்வராஜ் (வயது 52) என்பவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது 100 அடி உயர கிரேனில் அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்கு செல்வராஜின் தலையில் விழுந்தது.

இதில் படுகாயமடைந்த செல்வராஜ் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று செல்வராஜ் நலம் விசாரித்து வந்தார். இந்நிலையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top