Connect with us

Cinemapettai

பஸ் டே கொண்டாட்டமா இந்தா ஒரே ப்ரேக்.. மொத்த கூட்டமும் சிதறி கீழே விழுந்தது.. வீடியோ

bus-day-chennai

Tamil Nadu | தமிழ் நாடு

பஸ் டே கொண்டாட்டமா இந்தா ஒரே ப்ரேக்.. மொத்த கூட்டமும் சிதறி கீழே விழுந்தது.. வீடியோ

சென்னையில் அரசு பஸ்சில் பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் கைது செய்த போலீஸார். அரசு பேருந்து டிரைவர் போட்ட ப்ரேக்கில் மேலே இருந்த மொத்த கூட்டமும் கீழே விழுந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் ரயிலில் மற்றும் பஸ்ஸில் பட்டாக்கத்தியை தரையில் உரசிக்கொண்டு கல்லூரி மாணவர்கள் சேட்டை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து எச்சரிக்கை செய்ததுடன் வீட்டிற்கும் தகவல் கொடுத்து படிக்கும் மாணவன் என்பதால் கருணை அடிப்படையில் அனுப்பினார்கள்.

சமீபகாலமாக பொது இடங்களில் சென்னையில் மாணவர்கள் தொல்லை இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று “பஸ் டே” என்ற பெயரில் அரசு பஸ்சில் பல மாணவர்கள் பஸ்ஸின் மேற்கூரையில் அமர்ந்து கூச்சலிட்டு சாலையில் வந்து கொண்டிருந்த போது கொண்டாடியுள்ளனர்.

ஆனால் தற்போது பஸ்ஸின் மேற்கூரையில் இருந்த கல்லூரி மாணவர்கள் அருகில் மோட்டார் வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பஸ் டிரைவர் பிரேக் அடித்தவுடன் மேலே இருந்த கல்லூரி மாணவர்கள் பல்டியடித்து தரையில் விழுந்தனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரும் கல்லூரி மாணவர்களுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top