திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

ஹையோ! 143 லட்சம் கோடி சொத்து வைத்திருக்கும் நகரம்.. இது ஊரா இல்ல சொர்க்கமா?

பொதுவாகவே உலகின் பணம் வைத்துள்ளவர்களுக்கே மதிப்பு என்று சொல்வார்கள். அது ஓரளவுக்கு இன்றைய காலத்தின் பலரது அனுபவத்தைப் பொறுத்து அது மாறக்கூடும்.

ஆனால், உலக நாடுகளைப் பொறுத்தவரை எந்த நாட்டில் அதிக பணமும், சர்வதேச சந்தையில் பண மதிப்பும் இருக்கிறதோ அந்த நாடுகளுக்கு சர்வதேச அளவில் மதிப்பிருக்கும். அங்கு வாழும் மக்களும் செல்வச் செழிப்புடன் வாழ்வர்.

அந்த வகையில், குளோபல் SWF ன் சமீபத்திய ஆய்வுகளின்படி, உலகின் மிக பணக்கார நகரங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது. அதி, அபுதாபி உலகின் டாப் பணக்கார நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. SWF என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் முதலீட்டு பைனான்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிக சொத்து மதிப்புள்ள நகரம் அபுதாபி!

அதன்படி, ஐக்கிய அமீரகத்தின் தலை நகர் அபுதாபி. அந்த நாட்டில் உள்ள ஏழு மிகப்பெரிய அமீரகங்களுள் பெரிய அமீரகமாகும். இந்த நகரம் தான் 1.7 டிரில்லியன் அமெரிக்கர் டாலர் மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.142 லட்சம் கோடியாகும்.

உலகின் மற்ற நாடுகளில் உள்ள ஓஸ்லோ, பெய்கிங், சிங்கப்பூர், ரியாத், ஹாங்காங் உள்ளிட்ட நகரங்களில் வாழ்வதற்கும் அதிக செல்வாக்கு மற்றும் பெரிய நகரங்களாவும், மக்கள் வசிப்பதற்கும் மற்ற நகரங்களைக் காட்டிலும் இங்கு அதிக செலவாகும் என கூறப்படும் நிலையில், இந்த நகரங்களை அபுதாபி விஞ்சிவிட்டதற்கு காரணம் அங்குள்ள மூலதனம் செல்வம் என கூறப்படுகிறது.

அதன்படி உலகின் அதிக செல்வாக்கு பெற்ற நகரங்களாகக் கருதப்படும் மேற்கூறிய 6 நகரங்களின் மொத்த செல்வத்தின் மதிப்பு மட்டும் 12.5 டில்லிய டாலர்கள் இருக்கும் எனவும், இது இந்திய மதிப்பில் ரூ.1000 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுவரை அபுதாபியில் உள்ள தொழிலதிபர்களின் முதலீடுகள், தொழில் வருமான, வணிகம், ரியல் எஸ்டேட்கள் இவற்றின் அடிப்படையில் இம்மதிப்பீடு எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், அங்குள்ள அரச குடும்பத்தினரின் முதலீடுகளின் தனிப்பட்ட சொத்துகள், மாளிகை இவையெல்லாம் கணக்கில் எடுக்காமல் இம்மதிப்பீடு வெளியிடப்பட்டிருக்கிறது.

எனவே அரச குடும்பத்தினரின் சொத்து மதிப்பு மட்டும் 1.7 டிரில்லியன் டாலர்கள் இருக்கும் எனவும், இவை இந்திய மதிப்பில் ரூ.28 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News